தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; இலங்கை அட்டூழியம்

By


சென்னை: நெடுஞ்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் (Fishermen) இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்ததாக கூறி அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Tamil Nadu: இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

இதற்கிடையில் விசாரணைக்குப் பின்னர் இலங்கை மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்ட சொந்த படகுகளில் அவர்கள் தனிமைப் படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படையின் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு பணிகள் காரணமாக, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2018-ல், எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 100 மடங்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

வங்கக் கடலில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படைக்கும் நீண்ட காலமாக பிரசனை இருந்து வருகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வது தொடர்கிறது. சில சமயங்களில் அவர்கள் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.

நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண பல்வேறு பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

Also Read | இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment