நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் – பாபர் அசாம் || Tamil News T20 WC cricket- Babar Azam says If you ask me we will win

Byடி20 உலக கோப்பை தொடரில் இந்தியா வரும் 24-ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

துபாய்:

டி20 உலக கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதில், இந்தியா வரும் 24-ம் தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 18-ம் தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையை நிச்சயம் வெல்வோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அமீரகத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விளையாடி வருகிறோம். அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைமை எங்களுக்கு அத்துப்படி. எனவே, நாங்கள் டி20 உலக கோப்பையை நிச்சயம் வெல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment