நியமனத்தில் முறைகேடு- ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து || Tamil News 636 appointments cancelled in Aavin

Byஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அளித்த பேட்டி வருமாறு:-

ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்களில் நியமனங்கள் நடைபெற்றிருந்தன. அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் அந்தப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலமாக தேர்வு நடத்தப்படும்.

ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment