Sunday, March 7, 2021
Home Tamil nadu பிரதமர் மோடி 25ந்தேதி பிரசாரம்- போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை கொடிசியா வளாகம் || Tamil News...

பிரதமர் மோடி 25ந்தேதி பிரசாரம்- போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை கொடிசியா வளாகம் || Tamil News PM Modi campaign on 25th heavy police security in Coimbatore



பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை:

கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 25-ந் தேதி தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக போலீசார் மத்திய பாதுகாப்பு படைப்பிரிவு போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கொடிசியா வளாகத்துக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டத்துக்கான மேடை அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் இருந்து கோவைக்கு சிறப்பு படைப்பிரிவினர் வந்துள்ளனர். அவர்கள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தமிழக கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ்புஜாரி கோவைக்கு வந்துள்ளார். அவர் கோவை மாவட்ட போலீசாருடன் பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

வருகிற 25-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக மாலை 3.30 மணிக்கு கோவைக்கு வருகிறார். பின்னர் கோவையில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனைதொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கொடிசியா வளாகத்தில் உள்ள பொதுக்கூட்ட மேடைக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் இரவு 7 மணிக்கு தனி விமானம் மூலமாக மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து பாதுகாப்பு பணிக்காக போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.


https://www.youtube.com/watch?v=videoseries





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

RIP TO அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் 104 வயதில் காலமானார் Source link

ஏர் ஏசியா Flying Taxi வர்த்தகத்தை அடுத்த ஆண்டு தொடங்குகிறதா..!!

மலேசிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா குழுமம் சனிக்கிழமையன்று பறக்கும்-டாக்ஸி (Flying Taxi) வர்த்தகத்தை அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக, ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டோனி பெர்னாண்டஸ்...

Recent Comments