புதிய ரே‌ஷன் கார்டு: தமிழகத்தில் 3 லட்சம் பேர் விண்ணப்பம்

By


அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் பெற மட்டும் அல்லாது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் விண்ணப்பிக்க முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் அட்டை. தமிழகத்தில் வசிக்கும் அனைவரும் குடும்ப அட்டைக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது.

ரே‌ஷன் கடைகளில் (Ration Card) விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 2 கோடியே 5 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகிறார்கள். குடும்ப அட்டைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் (Groceries items) மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகையும், பொங்கல் தொகுப்பும், வேட்டி, சேலை என பலவற்றை வழங்கப்படுகின்றன.

Also Read | Ration Card அதிர்ச்சி செய்தி: இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம்!!

இதற்கிடையில் தமிழகத்தில் புதிய ரே‌ஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 15 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கிறார்கள். அதேபோல 10 முதல் 12 ஆயிரம் புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன என்று சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய அரசு 15 நாட்களுக்குள் ரே‌ஷன் கார்டு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதால் அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக ரே‌ஷன் கார்டு வழங்கும் கால அவகாசம் 60 நாட்கள் என்று இருந்த நிலையில் தற்போது அது 15 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 3 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இவர்களுக்கு ஸ்மார்ட்கார்டு விரைவில் வழங்குவதற்கான பணிகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

ALSO READ: Tamil Nadu: ரேஷன் கடைகளில் மீண்டும் கைவிரல் ரேகை பதிவு: அரசு அதிரடி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Leave a Comment