போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா || Tamil News Govt school student affected coronavirus near pochampalli

Byகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவன் படித்த வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, கடந்த 8-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டடது.

இதேபோல் மேலும் 3 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவன் படித்த வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும் பாரூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment