மாணவனை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; பதற வைக்கும் வீடியோ

By


கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவனை, ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கால்களால் உதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

கடலூர் (Cuddalore) மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவன் (School Student) ஒருவர் வகுப்புக்கு சரியாக வராமல் இருந்தார். இதனால் கடுப்பான ஆசிரியர் அவரை முட்டிபோட வைத்துள்ளார்.

ALSO READ | பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ!

பின்னர் அங்கு இருந்த பிரம்பால் அந்த ஆசிரியர் மாணவனை கடுமையாக அடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் அந்த ஆசிரியர் இதோடு நிற்காமல் அந்த மாணவரை தனது கால்களால் எட்டியும் உதைத்ததுடன் இழிவாக பேசி மோசமாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு இருந்த சக மாணவர் ஒருவர் வீடியோ பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த காட்சியை படம் பிடித்த மாணவர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது மாணவரை ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ALSO READ | மீண்டும் அதிர்ச்சி! பீகாரில் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ .900 கோடி டெபாசிட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment