முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு: முதல்வர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

By


சென்னை: சென்னை கிண்டியில் இன்று நடந்த முதலீட்டாளர்கள் விழா ஒன்றில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கிண்டியில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழா தமிழக தொழில்துறையில் ஒரு முக்கிய மைலகல்லாக பார்க்கப்படுகின்றது. 

தமிழக தொழில்துறையின் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளா் முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கா்னி மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) முன்னிலையில் சுமார் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இவற்றின் மூலம் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று எரிசக்தி, காற்றாலை, சரக்கு போக்குவரத்து, வாகனத்துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

ALSO READ: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்

நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களான கேப்பொட்டல் லேண்ட், அதானி, ஜெ.எஸ்.டபிள்யு போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மேலும், இன்றைய நிகழ்ச்சியில் பல முக்கிய திட்டங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக ரூ.4,250 கோடி மதிப்பிலான 9 தொழில் திட்டங்களுக்கு இன்று முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இது தவிர, ரூ.7,117 கோடி மதிப்பிலான 5 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். தமிழகம் முதலீட்டாளர்களின் முன்னுரிமையில் இருக்கும் மாநிலமாக வளரும் என தன் உரையின் மூலம் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக (Tamil Nadu) தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு மிகவும் தொன்மையானது என்றும் நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை அளித்து வந்துள்ளது என்றும் கூறினார்.  

ALSO READ: முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்து

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment