வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் – தமிழகம் இலக்கு

By


தமிழகத்தில் தற்போது கொரோனா 2ம் அலை சற்று குறைந்து மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.  இருப்பினும் மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஒரே வழி என்பதால் தமிழக அரசு அதற்கான முழு மூச்சில் இறங்கியுள்ளது. 

நேற்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் தமிழக அரசு சார்பில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.  இதே முறையில் தடுப்பூசிகளை ஒவ்வொரு வாரமும் தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  இதன் சார்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டாவியாவிற்க்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். 

vaccine

அதில், தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடத்த தேவையான தடுப்பூசிகளை வழங்கிய ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  தமிழகத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்று 28.9 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  ஒன்றிய அரசு இதுவரை தமிழகத்திற்கு 3,81,41,820 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.  தடுப்பூசி முகாம் வெற்றியை தொடர்ந்து தமிழக அரசு அனைத்து வாரங்களிலும் இதேபோன்ற முகாம்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.  மக்கள் தொகை அதிகமான உள்ள மாநிலத்தில் இவ்வாறு செய்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். அதன்படி தமிழகத்தில் இனி வரும் வாரங்களில் வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிட்டுள்ளோம்.  இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்கிட இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.   இதன்படி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம் என்று மா சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment