விதிகள் மீறிய பயணிகளிடம் இருந்து ரூ.35 கோடி அபராதம் வசூல் – தெற்கு ரெயில்வே || Tamil News Violation – Railway passengers fined Rs 35 crore in 6 months

Byமுக கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து 1.63 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை:

நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  

ரெயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு என வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து வெளியிடப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத பயணிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பயணத்தின்போது கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது.

இவற்றில் முக கவசம் அணியாததற்காக ரூ.1.63 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment