வெற்றி இலக்கு 152 ரன்… முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறும் நெல்லை ராயல் கிங்ஸ் || TNPL 2021, Trichy Warriors set target 152 runs to Nellai Royal Kings

Byடிஎன்பிஎஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் சேர்த்தது.

சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படுகிறது. முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டு, பங்கேற்ற அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. திருச்சி அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்க வீரர் அமித் சாத்விக் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் முகுந்த் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நிதிஷ் ராஜகோபால் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

15 ரன்களுக்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின்னர் அமித் சாத்விக்-ஆதித்ய கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அமித் சாத்விக் 71 ரன்களிலும், ஆதித்ய கணேஷ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஆகாஷ் சம்ரா ஒரு ரன் மட்டுமே சேர்த்தார். அதிரடியாக ஆடிய அந்தோணி தாஸ், 35 ரன்கள் (நாட் அவுட்) குவிக்க, திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 152 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய நெல்லை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 12 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெல்லை அணி, மீதமுள்ள விக்கெட் காப்பாற்ற கடுமையாக போராட வேண்டியிருந்தது. 6வது விக்கெட் ஜோடியான பாபா இந்திரஜித்-சஞ்சய் யாதவ் நிதானமாக ஆடினர்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment