வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – அண்ணாமலை வரவேற்பு || Tamil News Tamilnadu BJP president Annamalai welcomes State decision

Byதமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி மறுத்து வந்தது.

இதற்கிடையே, மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி,  தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் அனைத்து  நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியாகி உள்ள இந்த அறிவிப்பை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Comment