2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
சென்னை:
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
2020-21-ம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள், இந்தியாவில் முன்னணி முதலீட்டு இலக்காக தமிழ்நாடு திகழ்வதை மீண்டும் உறுதி செய்துள்ளன.
2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கி, 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. ஆக மொத்தம் 89 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
https://www.youtube.com/watch?v=videoseries