9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

By


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் , அதாவது 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பணியார்ளர்களின் தேவையை கருத்தில் கொண்டு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது

இந்த 9 மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் மற்றும் கோவிட் தடுப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் செய்யப்படும். கொரோனாவால் பாதித்தவர்கள் மாலை 5 முதல் 6 வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.

 

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படும். மேலும் இந்தத்தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

ALSO READ | 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

வேட்புமனு தாக்கல் நிலவரம்: 
நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்:

15 முதல் 22 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல்
23 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை
25 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள்

வாக்கு எண்ணிக்கை: 
அக்டோபர்  12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

துணைத் தலைவர் பதவி:
ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 22 ஆம் தேதி மறைமுகத் தேர்தல். இதில் கவுன்சிலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும்  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment