Tuesday, March 9, 2021
Home Technology அட்டகாசமான அம்சங்கள், நம்ப முடியாத மிகக் குறைந்த விலையுடன் அசத்த வருகிறது Samsung Galaxy M02

அட்டகாசமான அம்சங்கள், நம்ப முடியாத மிகக் குறைந்த விலையுடன் அசத்த வருகிறது Samsung Galaxy M02


புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் ஒவ்வொரு நாளும் சந்தையில் வந்து கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களுக்கு ஏற்ற ஃபோனை தேர்ந்தெடுத்து வாங்க அதிக வகைகள் கிடைக்கின்றன.  தொற்றுநோய் காரணமாக பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் நடப்பதால், சிறந்த டிஜிட்டல் அம்சங்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆகையால் பெரிய திரை, நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவை அவசியமாகின்றன. அப்படிப்பட்ட அம்சங்களுடன் ஒரு புத்தம்புதிய ஸ்மார்ட்ஃபோன் நீங்கள் நினைக்க முடியாத விலையில் கிடைக்கும் என்றால் நம்ப முடியாமல் இருக்கலாம்!! ஆனால், இது உண்மை!! விவரம் அறிய மேலே படிக்கவும்.

கேளிக்கைக்கு குறைவில்லை (The Mega Entertainer)

உங்கள் கேளிக்கைத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சாம்சங் M02 என்ற அட்டகாசமான ஒரு ஸ்மார்ட்ஃபோனை மிக மலிவான ஒரு விலையில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி M01 இன் அடுத்த வகையாகும் இந்த புதிய மாடல். 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே (HD+ Infinity-V display) மற்றும் 720×1600 பிக்சல் ரிசல்யூஷனுடன், உங்கள் உள்ளங்கையில் நீங்கள் ஒரு அற்புதமான அனுபவத்தை அடையலாம். உங்கள் கேளிக்கைக்கு எந்த தடையும் வராமல் இருப்பதை உறுதி செய்ய, இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நீங்கள் பயணத்தில் இருந்தாலும், ஒரு சிறிய மாற்றம் தேவைப்பட்டாலும், உங்களுடைய சாம்சங் எம்02-வில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான அனைத்து வீடியோக்களையும் நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.

தருணங்களை படம் பிடிக்கலாம் (Capturing Moments)

உங்கள் அழகான தருணங்களை படம்பிடித்து அவற்றை அழியாத நினைவுகளாக்கிக்கொள்ள, சாம்சங் கேலக்ஸி M02 (Samsung Galaxy M02) இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இது 13 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. சமூக ஊடகத்தில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கும், பயணத்தின்போதும் புதுப்பிப்புகளை பகிர விரும்பும் இக்கால இளசுகளுக்கும் மிகவும் சரியான ஃபோனாக இது கண்டிப்பாக இருக்கும்.

ALSO READ: ₹.7000-க்கும் குறைவான விலை அட்டகாசமான அம்சங்களுடம் அறிமுகமான Samsung Galaxy M02!

பிற அற்புதமான அம்சங்கள்

இரட்டை சிம் (நானோ) சாம்சங் கேலக்ஸி M02 ஆண்ட்ராய்டு 10 இல் One UI உடன் உடன் இயங்குகிறது. சக்திவாய்ந்த இந்த செயலி ஒரு மிக மென்மையான கேமிங் அனுபவத்தை உருவாக்குகிறது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் உறுதியான பிடியுடன், இந்த தொலைபேசி 4 அடர்த்தியான வண்ணங்களில் வருகிறது. கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் நமக்கு பிடித்தமான வண்ணத்தை நாம் தேர்வு செய்யலாம். இதில் உள்ள நேர்த்தியான மேட் ஃபினிஷ் இதன் அழகைக் கூட்டுகிறது.

சாம்சங் (Samsung) கேலக்ஸி M02 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் குவாட் கோர் மீடியாடெக் எம்டி 6739 SoC (quad-core Media Tek MT6739 SoC) உடன் வருகிறது. இதில் 3 ஜிபி ரேம் வரையுள்ளது. இதிலுள்ள ஸ்டோரேஜை பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB வரை நீட்டிக்கலாம். இதில் உள்ள இணைப்பு ஆப்ஷன்கள் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவையாகும்.

பணமதிப்பு (Value for Money)

இந்த அருமையான அம்சங்களை கொண்ட கேலக்ஸி M02 விலை 2GB + 32GB-க்கு வெறும் 6,999 ரூபாயாகவும், 3GB + 32GB வேரியண்டிற்கு 7,499 ரூபாய் ஆகவும் நிர்ணயிக்கபட்டுள்ளது. இது 2021 பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் Amazon.in, Samsung.com மற்றும் அனைத்து சில்லறை கடைகளிலும் கிடைக்கிறது.

நீங்கள் தொலைதூர இடங்களில் பணிபுரிந்தாலும், ​வீடியோ அழைப்புகளில் கலந்துகொள்ளும்போதும், ​​ஆன்லைனில் படிக்கும்போதும் (Online CLasses), ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் படம் பார்த்தாலும், எதுவாக இருந்தாலும் இந்த ஃபோனின் பெரிய திரையும்  திறன்மிக்க பேட்டரியும் உங்களுக்கு ஒரு வரமாக அமையும். இனி ஒரு பவர் பேக் ஸ்மார்ட்ஃபோனைக் கொண்டிருப்பது தூரத்து கனவல்ல. அருகில் இருக்கும் நிஜம்தான்!! சாம்சங் இந்தியாவில் 25 வெற்றிகரமான ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் இந்த ஃபோன் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சாம்சங் இந்திய சந்தையை நன்றாக புரிந்துகொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பணியில் சாம்சங் முன்னோடியாக இருக்கிறது. சாம்சங் மூலம் மிக மலிவான விலையில் நேர்த்தியான தரம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

‘எனது M, எனது கேளிக்கை’ என இனி சத்தமாக, பெருமையாக நாம் சொல்லலாம்!!

ALSO READ: ரூ .9000 தள்ளுபடி விலையில் பெறுங்கள் Samsung இன் பிரீமியம் போன்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

விளையாட்டாய் சில கதைகள்: இந்திய அணியின் இளம் கீப்பர்

Published : 09 Mar 2021 03:11 am Updated : 09 Mar 2021 06:14 am   Published : 09 Mar...

COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று வழக்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக 18,000 க்கு மேல் பதிவாகியுள்ளன. மொத்த கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளதாக திங்களன்று...

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் தொடர்; தங்கப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா: தரவரிசையில் முதலிடத்துக்கும் முன்னேற்றம்

மேட்டியோ பெலிகோன் ரேங்கிங் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தரவரிசைப் பட்டியில் பஜ்ரங் புனியா முதலிடத்துக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய...

Recent Comments