அதிக பலன்கள் தரும் Airtel, Jio மற்றும் BSNL ஃபைபர் திட்டம்

By


ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அவ்வபோது அறிவித்துக்கொண்டே வருகிறது. இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே விலையில் வழங்கி வருகிறது. இது போன்று பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வெவ்வேறு வகையான இணைய தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையும் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. 

இந்நிலையில் ஏர்டெல் (Airtel Xsteam), பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ (Jio Fiber) ஆகிய மூன்று நிறுவனங்களும் பிரீமியம் ஃபைபர் (Fibre) திட்டம் வழங்கி வருகிறது. அதன் முழு விவரத்தை இங்கே விரிவாக காண்போம். 

ALSO READ | Jio Fiber அசத்தல் சலுகை: புதிய திட்டத்தில் இவை அனைத்தும் இலவசம்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அல்ட்ரா-பிராட்பேண்ட் திட்டமானது வரம்பற்ற இணையத்தை 300 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தின் கீழ் வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி கால்களையும் வழங்குகிறது. பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 3300GB வழங்கப்படுகிறது. ஏர்டெல் தாங்ஸ் ஆப் நன்மைகளும், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான சந்தாக்களும் வழங்கப்படுகிறது.

ஜியோ ஃபைபர் ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம்:
ஜியோ ஃபைபர் ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம் 300 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குவதோடு, கூடுதல் செலவில்லாமல் 15 OTT ஆப்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 3300GB வழங்கப்படுகிறது. மேலும் இதில் அமேசான் பிரைம் வீடியோக்கு 1 வருட இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ஃபைபர் அல்ட்ரா ரூ 1499 பிராட்பேண்ட் திட்டம்:
இந்த திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் ஃபைபர் சந்தாதாரர்களுக்கு 300 எம்.பி.பி.எஸ் இணைய வேகம் கிடைக்கும். பிராட்பேண்ட் திட்டத்தின் மூலம் 4000GB வழங்கப்படுகிறது. அதன்பின் இணைய வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும். உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் பிரீமியம் பேக்கிற்கு இலவச சந்தாவை வழங்குகிறது.

ALSO READ | Best Broadband Plans: 100Mbps வேகம், வரம்பற்ற தரவுடன் கிடைக்கும் அசத்தலான திட்டங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Leave a Comment