ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை – ஐபோன் பயன்படுத்துவதில் கவனம் !

By


ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் கேமரா தரம் குறித்து வெளியிட்டு உள்ள புது தகவல் ஐபோன் பயனர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் என்ன கூறியுள்ளது என்றால் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் என்ஜின் ஏற்படுத்தும் அதிர்வுகள் ஐபோன் கேமரா தரத்தை குறைத்துவிடும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை ஆப்பிள் தனது சப்போர்ட் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  சமீபத்திய ஐபோன் மாடல்களில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் எனப்படும் IOS மற்றும் க்ளோஸ்டு லூப் ஆட்டோபோக்கஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும், தொடர்ச்சியாக அதீத அதிர்வலைகளில் ஐபோன் பயன்படுத்தினால், கேமராக்களின் தரம் குறைய ஆரம்பிக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.   இவ்வாறு ஆகும் பட்சத்தில் ஐபோன்களில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் குறையும். ஐபோன்களில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களின் தரம் தலைசிறந்ததாக இருக்க செய்யும் உபகரணங்கள் அதிர்வுகளை தாங்காது.

இதனால் ஐபோன் பயன்படுத்துவோர் அதனை அதிக என்ஜின் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளில் பொருத்துவதை ஆப்பிள் பரிந்துரைக்கவில்லை.  மேலும் சிறிய என்ஜின் கொண்ட வாகனங்கள், எலெக்ட்ரிக் என்ஜின் கொண்ட மொபெட் மற்றும் ஸ்கூட்டர்களில் ஐபோன்களை பொருத்துவதாலும் கூட IOS மற்றும் ஏ.எப். சிஸ்டம்கள் பாதிக்கப்படலாம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

iphone

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment