Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!

By


மூன்றாம் உலகப் போர் எப்போதுமே, எதற்காகவும் வரக்கூடாது என்பதை முதல் இரு உலகப் போர்களின் அனுபவத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். இருப்பினும், மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக வரும், கொரோனாவினால் வரும் என பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது வதந்திகள் வெளியாகும்.

ஆனால், தற்போது மூன்றாம் உலகப்போருக்கு எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம், அதற்குக் காரணம் வேற்று கிரகவாசிகள் (Aliens) என்று அமெரிக்காவில் உயர் பதவியில் இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர்  கூறியிருப்பது அச்சத்தை மட்டும் அல்ல, இது உண்மையாக இருக்குமோ என்ற பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

மற்றொரு கிரகத்திலிருந்து வந்த வேற்று கிரகவாசிகள் அணு இலக்குகளிலும், ஆயுத அமைப்புகளிலும் ஊடுருவி அவற்றை முடக்கியதாக அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் பணிபுரிந்த ராபர்ட் சலாஸ் (Robert Salas) தெரிவித்துள்ளார். மூன்றாம் உலகப் போர் ( World War III ) வேற்று கிரகவாசிகளால் தொடங்கலாம் என்று அமெரிக்காவின் மூத்த ராணுவ அதிகாரி கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read Also | வேற்றுகிரகவாசிகள் தலைமறைவாக இருப்பதாக பகீர் தகவல்

அமெரிக்க விமானப்படையில் உயர் பதவியில் பணிபுரிந்த ராபர்ட் சலாஸ், ஏவுகணைகள் திருடு போவதை பார்த்ததாக குறிப்பிட்டார். அமெரிக்க விமானப்படையின் நான்கு தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை மிக விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராபர்ட் சலாஸ் அமெரிக்க விமானப்படையில் ஒரு ஆயுதக் கட்டுப்பாட்டாளராக இருந்தார், மேலும் அவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பிரிவில் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். எனவே, இவரது கருத்தை வெறும் வதந்தியாகவோ, புரளியாகவோ மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. 

அதுமட்டுமல்ல, ராபர்ட் சலாஸ், டைட்டன் -3 திட்டத்தில் விமானப்படை ஏவுகணை உந்துவிசை பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார், இது அமெரிக்காவின் மிக நவீன மற்றும் அழிவுகரமான அணு ஏவுகணை திட்டமாக கருதப்படுகிறது.

Read Also | அமெரிக்காவில் உள்ள மர்ம இடம்; வேற்று கிரகவாசிகள் வசிக்கும் இடமா.. !

சலாஸ் 1971 முதல் 1973 வரை விண்வெளி விண்கலம் வடிவமைப்பு திட்டங்களில் மார்ட்டின்-மரிட்டா ஏரோஸ்பேஸ் (Martin-Marita Aerospace) மற்றும் ராக்வெல் இன்டர்நேஷனல் அமைப்பில் (Rockwell International on Space Shuttle) பொறியாளராகவும் பணியாற்றினார்.

1967 மார்ச் 24, அன்று மால்ம்ஸ்ட்ரோம் விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஒரு நிலத்தடி ஏவுகணை கட்டுப்பாட்டு வசதியின் தளபதியாக சலாஸ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கிரகத்தில் இருந்து வந்த வேற்றுகிரகவாசிகள் அணு இலக்குகளின் ஆயுத அமைப்புகளில் ஊடுருவி அவற்றை முடக்கிவிட்டார்கள். ஏவுகணைகளை 

இயக்குவதன் மூலம் வேற்றுகிரகவாசிகளும் ஏவுகணைகளைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள் என்று அவர் கூறுகிறார். இந்த விஷயத்தை விசாரிக்க அமெரிக்க காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக சலாஸ் கூறினார். இதுவரை கண்டம் விட்டு கண்டம் பாயும் 10 ஏவுகணைகள் செயலிழந்து போய்விட்டதாக சாலாஸ் கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது.

Read Also | வேற்று கிரகவாசிகளை பார்க்க வேண்டுமா? கூடுதல் இணைப்பாக வைரசும் கிடைக்கலாம்!

Also Read | சூரிய ஒளியால் சார்ஜ் ஆகும் மின்சார கார்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Leave a Comment